வேலவன் ஸ்டோர்ஸ்

வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனம் தீபாவளி சிறப்பு சலுகையாக கொரானாவை எதிர்த்துப் போராடிய முன்கள போராளிகளுக்கு எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடைகளில் ஒன்று. தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனம் சென்னையில் உஸ்மான் ரோட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.

டிநகரில் எங்கும் இல்லாத அளவில் குறைந்த விலையில் ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். ஏற்கனவே தீபாவளி சிறப்பு சலுகையாக தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிய முன்கள வீரர்களான காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கூடுதலாக 10 % சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மொத்தம் 7 தளங்களை கொண்ட வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் பேன்சி உடைகளுக்கு என தனி தளம், புடவைகள், பட்டுப் புடவைகள், சிறுவர்கள் உடைகள், சிறுமியர்கள் உடைகள், ஆண்களுக்கென தனி உடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தளங்கள் அமைய பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.