முகேன் ராவ் நடித்து வரும் வேலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Velan First Look Release Update : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் கவின் இயக்கத்தில் தயாரிப்பாளர் கலைமகன் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் வேலன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முகேன் உடன் இணைந்து காமெடி நடிகர் சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை இணையத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.