Veeram Remake Movie Update
Veeram Remake Movie Update

தல அஜித் படத்தில் இருந்து அக்ஷய் குமார் விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Veeram Remake Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வீரம்.

சிறுத்தை சிவா இயக்க தமன்னா நாயகியாக நடித்திருந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது.

அஜித் படத்தால் நடக்கும் மாபெரும் மாற்றம், கொட்டோ கொட்டுனு கொட்ட போகும் வசூல்!

இந்த படத்தின் ஹிந்தி ரிமேக் உருவாவதாக இருந்தது, இதில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். மேலும் நாயகிக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கைவசமாக பல படங்கள் இருப்பதால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் இவருக்கு பதிலாக பிரபல நடிகரான விக்கி கௌஷல் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.