இயக்குனர் அட்லியை இட்லி என கலாய்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மா.
Varsha Bollamma Wishes to Atlee : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார். இவர் இயக்கிய நான்கு படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் அட்லி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அட்லியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த வர்ஷா பொல்லம்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னுடைய மொக்க ஜோக்குகளையும் அமைதியாக ரசித்த உங்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
மேலும் அந்த பதிவில் ஹாப்பி பர்த்டே இட்லி அண்ணா என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு