திருமணம் பற்றி பரவிய தகவல் – வரலட்சுமி கொடுத்த ஆவேச விளக்கம்..!
Boney Kapoor‘s Latest Announcement : பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.
ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு அவரின் ஆசைக்காக அஜித் கபூர் தயாரிப்பில் நேர்கொண்டபார்வை என்ற என்ற பெயரில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்தார்.
சிம்புவை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க சூப்பரா இருக்கும்.. பிரபல நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள் – யார் அந்த நடிகை தெரியுமா?
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்தின் அப்டேட்டை கொடுங்கள் என தினம் தினம் கேட்டு வருகின்றனர்.
ஆனால் போனி கபூர் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாது. படத்தை பற்றி விளம்பரம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளார்.
இப்படியான நிலையில் அவரிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியாக அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் அதை கவனிக்கத் தொடங்கினர்.
நிச்சயம் வலிமை படம் குறித்து அப்டேட் எதையாவது கூறி இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்.
ஆம் போனிகபூர் அந்த அறிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் தங்கியிருந்த வீட்டில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை உடல் நிலை சரியில்லாமல் போன அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போது கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போனி கபூர் உட்பட அவரது வீட்டில் இருந்தவர்களுக்கு சோதனை செய்த போது யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
முடிதிருத்தும் பணியாளர்கள் 130 பேருக்கு அரிசி மூட்டைகள் கலப்பை மக்கள் இயக்கத்துடன் நடிகர் ஹரீஷ் கல்யாண் வழங்கினார்!
அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிர மாநிலம் எடுக்கும் நடவடிக்கைகளை மதித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தாங்கள் வெளியே எங்கேயும் செல்லவில்லை. அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த நபரும் வெகு விரைவில் நலம் பெற்று எங்கள் வீட்டிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் எனவும் போனி கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை பார்த்த அஜித் ரசிகர்கள் வலிமை குறித்த அப்டேட் ஆக இருக்கும் என நம்பி ஏமாந்து விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.