Varalaxmi Dance to Vaathi Comming

திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை வரலட்சுமி.

Varalaxmi Dance to Vaathi Comming : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அனிருத் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்தன. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

குட்டீஸ் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் இன்றுவரை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி திருமண நிகழ்ச்சி ஒன்றில் வாத்தி கம்மிங் பாடலுக்கு செமையாக ஸ்டெப் போட்டு நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் இதனை செய்து செம டான்ஸ் என பாராட்டி வருகின்றனர்.