வனிதா யூட்யூப் பார்ட்னர்

தன்னுடைய யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் கைவிரித்து விட்ட நிலையில் வனிதா தன் யூட்யூப் பக்கத்திற்கு யார் உதவுகிறார்கள் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

வனிதா யூட்யூப் பார்ட்னர் : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயகுமார் அவர்களின் மகள் வனிதா. இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்த வனிதா இரண்டிலும் விவாகரத்து பெற்றார். அதன்பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் காதலில் இருந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார் ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். அந்த சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆறு மாதம் கூட முடிவடையாத நிலையில் வனிதா பீட்டர் பாலை பிரிந்துள்ளார். அவர் குடிக்கு அடிமையாகி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். பீட்டரை பிரிந்த வனிதா யூடியூப் சேனலை நடத்தை மிகவும் சிரமப்பட்டு உள்ளார்.

இதனால் மீண்டும் அவரை அணுகிய போது எந்த மூஞ்சிய வெச்சுட்டு என பார்க்க வந்த என வனிதாவை விளாசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் வனிதா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் வனு இப்போ உன்னுடைய யூடியூப் சேனலுக்கு உதவியாய் இருப்பது யார் எனக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வனிதா ஒரு யூடியூப் சேனலின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் தான் தன்னுடைய பார்ட்னர் என தெரிவித்துள்ளார். அதாவது பீட்டர் பால் இல்லாமல் தன்னால் யூடியூப் சேனலை நடத்த முடியும் என மறைமுகமாக வனிதா தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.