Vanitha Vijayakumar Latest Photos

உடல் எடையை மட்டும் குறைத்து செம ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறியுள்ளார் நடிகை வனிதா.

Vanitha Vijayakumar Latest Photos : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருக்கும் நடிகை மஞ்சுளாவுக்கும் பிறந்த மூத்த மகள் தான் வனிதா. சந்திரலேகா என்ற திரைப்படத்தின் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார். அதன்பன்னர் ராஜ்கிரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். தன்னுடைய குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன், மற்றும் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தற்போது வனிதாவுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அனல் காற்று என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2கே காதல் அழகானது என்ற படத்தில் அதில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரசாந்த் நடிப்பில் உருவாகும் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது போன்று பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார் நடிகை வனிதா. இதனால் தன்னுடைய உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.