Vanitha Vijayakumar As Heroine in New Movie

பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் ஹீரோயினியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vanitha Vijayakumar As Heroine in New Movie : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமார்.

அதுமட்டுமில்லாமல் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார். மேலும் விஜய் டிவியில் மற்றொரு நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாகவும் பங்கேற்றுள்ளார்.

இப்படியான நிலையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்தில் பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன.

ஆனால் தற்போது வனிதா ஹீரோயினியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இயக்குனர் ஆதம் தாசன் படத்தில் நடிக்க உள்ளதாகவும் மேலும் காமெடி நடிகரான கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்திற்கு அனல் காற்று என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.