Vanitha Vijayakumar Again in Love

நடிகை வனிதா மீண்டும் காதலில் இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vanitha Vijayakumar Again in Love : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார். சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். அந்த யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதே வேகத்தில் அவரை பிரியமும் செய்தார்.

இப்படியான நிலையில் தற்போது வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த முறை அவர் யாரை காதலிக்கிறார் என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.

இந்தப்பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பலரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.