Sri Hari in Saguni Movie

நடிகர் கார்த்தியின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி.

Vanitha Son in Saguni Movie : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் பழம்பெரும் நடிகர் மற்றும் நடிகையான விஜயகுமார், மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.

தம்முடைய பெற்றோரை விமர்சனம் செய்து தொடர்ந்து பல பேட்டிகளில் கொடுத்ததன் மூலம் சர்ச்சைக்குரிய நபராக அனைவரின் மத்தியிலும் பரிச்சயமானார்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

4 வருட கேப்பிற்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க போகும் கார்த்தி – இயக்குனர் யார் தெரியுமா??

இவருக்கு முதல் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். மகனின் பெயர் ஸ்ரீ ஹரி. தற்போது வரை தன் அம்மாவுடன் சேராமல் தாத்தா விஜயகுமாருடன் இருந்து வருகிறார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றுக்கொண்டார். தற்போது பீட்டர் பால் என்பதை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

100 கோடி வசூல் வந்தாலும் சரி.. அதை மட்டும் செய்ய மாட்டேன் – அடம் பிடிக்கும் கார்த்தி, டாப் ஹீரோக்கள் மத்தியில் இப்படி ஒரு மனுஷனா!

இவருடைய மூத்த மகன் ஸ்ரீஹரி விஜய் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் சிறுவயது கார்த்தியாக நடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

படத்தைப் பார்க்கும் போது இது வனிதாவின் மகன் என கவனிக்கத் தவறாதீர்கள் தற்போது இது வனிதாவின் மகனா என வியந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.