Vanitha Reply to Meera Mithun
Vanitha Reply to Meera Mithun

மீரா மிதுன் வனிதாவை வச்சி செய்திருந்த நிலையில் மீண்டும் வனிதா தரமான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலிஷாக பதில் அளித்துள்ளார்.

Vanitha Reply to Meera Mithun : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம்வரும் மீராமிதுன் காலமாக பெரிய விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்ட நடிகர்களை விமர்சனம் செய்து ரசிகர்களை சீண்டி அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் இளம் நடிகர் நடிகைகளை ஒடுக்க இவர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவில் தன்னை வளர விடாமல் செய்ய பல வேலைகளை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் வனிதா அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் என்பது இல்லை எனக் கூறினார்.

இதற்கு மீராமிதுன் பதில் கொடுத்திருந்தார். நீயும் வாரிசு நடிகை தானே தமிழ் சினிமாவில் நெபோடிசம் இருக்கு என எப்படி ஒத்துக்கொள்வாய்?? என்னை ஒரு செலபிரிட்டியா ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்? உங்கள் ஈகோ தடுக்கிறதா என விளாசி இருந்தார்.

நீயும் அந்த லிஸ்ட சேர்ந்த ஆளு தானே.. அப்படிதான் பேசுவ, வனிதாவையும் வச்சு செய்த மீரா மிதுன் – பரபரப்பைக் கிளப்பிய பதிவுகள்.!!

மிராவின் இந்த பரபரப்பான பதிவுக்கு வனிதா நிச்சயம் அவரை வச்சு செய்வார், என் தலைவிய சீண்டிட்டல இனி நடக்கிறத பாரு என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் தற்போது வனிதா விஜயகுமார் இதுகுறித்து பாலிஷாக பதிவிட்டு இருப்பது பலருக்கும் ஷாக் தான்.

ஆம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பேபி நீ நிறைய சாதித்து இருக்க உன்னுடைய சாதனைகளை நான் மதிக்கிறேன். உன்னுடைய தன்னம்பிக்கை பிடித்து இருக்கு. தொடர்ந்து இப்படியே இரு. ஆனா ஒன்னு நீ வாழ யாரையும் தாக்கிப் பேச என தெரிவித்துள்ளார்.

வனிதாவின் இப்படியான பதிவைப் பார்த்த ரசிகர்கள் தன்னை மோசமா பேசுறவங்ககிட்ட வனிதா இப்படி பேச மாட்டாரே.. மீரா மிதுன் கிட்ட ஏன் இப்படி பம்பி போகணும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுபற்றி ரசிகர்களின் கமெண்ட்ஸ்