Vanitha Reply to Lakshmi Ramakrishnan
Vanitha Reply to Lakshmi Ramakrishnan

இரண்டாவது திருமணத்தை விமர்சித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன் கவனித்தால் தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.

Vanitha Reply to Lakshmi Ramakrishnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஜூன் 27-ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய இரண்டு மகள்களின் சம்மதத்துடன் அவர்களின் எதிரே வனிதாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் பீட்டரின் முதல் மனைவி என்னை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒருவரை விவாகரத்து செய்யாமல் இன்னொரு திருமணம் செய்வது என்பது எப்படி முடியும்? இதற்கு வனிதா எப்படி ஒப்புக் கொண்டார் என்று பதிவிட்டு இந்த திருமணத்தை விமர்சித்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 4-ன் தொகுப்பாளர் யார்?? எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு!

இதற்கு தற்போது வனிதா பதிலடி கொடுத்துள்ளார். என்னுடைய வாழ்க்கை பற்றி எனக்குத் தெரியும். நான் படித்தவள், சட்டம் அறிந்தவள். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நீங்க தலையிடாதீர்கள்.

இது ஒன்னும் பிக்பாஸ் வீடு அல்லது நீங்கள் நடத்தும் நிகழ்ச்சியோ அல்ல. ஏமாந்த மக்களை வைத்து நிகழ்ச்சி நடத்துங்கள் என அவரை விமர்சித்துள்ளார்.

இதனால் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையே வாக்குவாதம் நடைபெற்று உள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிலர் ஆதரவாகவும் வனிதாவிற்கு சிலர் ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

https://twitter.com/LakshmyRamki/status/1277476910759473154?s=19