Vanitha Fight With Peter Paul

மூன்றாவது கணவர் பீட்டர் பாலையும் நடிகை வனிதா பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vanitha Fight With Peter Paul : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் நடித்த இவருக்கு வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை என்றார்.

அதன் பின்னர் தனக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுடன் சில வாரங்களுக்கு முன்பு கோவா டூர் சென்றார். அங்கு இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. பீட்டர் பால் குடித்துவிட்டு வனிதாவிடம் வம்பிழுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வனிதா பீட்டர் பாலையும் பிரிந்து விட்டதாகவும் தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் விதவிதமாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.