Vanitha Daughter Becomes a Woman

தன்னுடைய இரண்டாவது மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டதாக வனிதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Vanitha Daughter Becomes a Woman : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது.

ஏற்கனவே 2 திருமணம், ஒரு காதல் ஆகியவற்றை கடந்து வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஓரிரு மாதங்களிலேயே இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து வனிதா பழையபடி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இப்படியான நிலையில் தன்னுடைய இரண்டாவது மகள் பெரிய மனுஷி ஆகிவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் வனிதா.

மேலும் தன்னுடைய பெண்ணுக்கு புடவை கட்டி அழகு பார்த்த புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CKAzTHKD7b3/?igshid=1klfb4a0hhkrh