வண்டி திரை விமர்சனம்.!

Vandi Movie Tamil Review

Vandi Movie Tamil Review : விதார்த், சாந்தினி, ஸ்ரீ ராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள் தாஸ், விஜித் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள படம் வண்டி.

ரஜீஷ் பாலா இயக்கத்தில் ஹஸீர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ் போகஸ் சரவணன் அவர்கள் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் செய்துள்ளார்.

கதைக்களம் :

கிருஷ்ணாவாக நடித்துள்ள விதார்த்தும் அவரது நண்பர்களும் ஒரு வாடகை வீடெடுத்து வாழ்ந்து வருகிறார்கள். விதார்த்திடம் அவரது வீட்டு உரிமையாளர் ஐபோன் ஒன்றை கொடுத்து ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார்.

இந்த ஐபோன் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணிடம் சிக்கி கொள்கிறது. இதனால் வேலையும் இழக்கும் விதார்த் அடுத்து ஒரு வேலையை தேடி செல்கிறார்.

அது பைனாஸ் கம்பெனி வேலை என்பதால் நண்பன் பணி புரியும் ரயில்வே பைக் பார்க்கிங்கில் இருந்து ஒரு வண்டியை எடுத்து செல்கிறார். இந்த வண்டியும் போலீசாரிடம் சிக்கி கொள்கிறது.

பறிபோன ஐபோன் மற்றும் பைக்கால் விதார்த் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? இறுதியில் நடப்பது என்ன என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

விதார்த் :

திறமையான நடிகர்களில் ஒருவரான விதார்த் வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அவர்களின் நண்பர்களாக நடித்துள்ள ஸ்ரீ ராம் கார்த்தி, கிஷோர் குமார் ஆகியோரும் தங்களுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ஷாந்தினி :

இப்படத்தின் நாயகியாக நடித்துள்ள ஷாந்தினி சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக அழாகாக நடித்துள்ளார். அவர் பேசும் சென்னை பாஷை ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

விஜித் :

இப்படத்தில் விஜித் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கியான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து கொடுத்துள்ளார்.

இயக்குனர் ரஜீஷ் பாலா :

இப்படத்தின் இயக்குனர் ரஜீஷ் பாலா படத்தை அழகான கோர்வையாக கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில இடங்களில் தேவையற்ற காட்சிகளை நீக்கி இருக்கலாம் என தோன்ற வைக்கிறது. படத்தின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி இருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை ரிசால் ஜெய்நீ என்பவர் செய்துள்ளார். தேவையற்ற காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.

சுராஜ் எஸ் குரூப் என்பவர் இசையமைத்துள்ளார். படத்திற்கு பின்னணி இசை கச்சிதமாக பொருந்தியுள்ளது. ஆனால் பாடல்கள் மனதில் நிற்கும் படியாக அமையவில்லை.

ஒளிப்பதிவு : தினேஷ், ஜாய்மதி ஆகியோர் படத்தை அவர்களின் பணிகளை செம்மையாக செய்துள்ளனர்.

தம்ப்ஸ் அப் :

1. விதார்த் நடிப்பு
2. ஷாந்தினியின் நடிப்பு
3. விதார்த் மற்றும் அவரது நண்பர்கள் சேர்த்து செய்யும் லூட்டிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் வேகத்தை கூட்டி இருக்கலாம்.
2. ஒரு சில இடங்களில் இடம் பெரும் ஒரே மாதிரியான வசனங்களையும், தேவையற்ற காட்சிகளையும் நீக்கி இருக்கலாம்.