Vanakkam Da Mapla

தமிழ் புத்தாண்டு தினத்தில் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ரிலீசாக உள்ளது ஜிவி பிரகாஷின் திரைப்படம் ஒன்று.

Vanakkam Da Mapla Movie Release : தமிழ் சினிமாவில் உருவாக்கியது திரைப்படங்கள் திரையரங்குகளில் மட்டும் வெளியாகி வந்த நிலையில் கொரானா காலத்திற்குப் பிறகு நேரடியாக OTT மற்றும் தொலைக்காட்சி சானல்களிலும் வெளியாகவும் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே யோகி பாபுவின் நாங்க ரொம்ப பிசி, மண்டேலா, விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி, சமுத்திரகனியின் ஏலே ஆகிய திரைப்படங்கள் நேரடியாக டிவி சேனலில் வெளியானது. இந்த படங்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படமான வணக்கம் டா மாப்ள என்ற திரைப்படமும் தொலைக்காட்சி சேனலில் வெளியாக உள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்த ராஜேஷ் இந்த படத்தினை இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர் திகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தமிழ் புத்தாண்டு அன்று டிவி சேனலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.