சூர்யாவை பாராட்டியும் அஜித், விஜயை வெளுத்து வாங்கியும் உள்ளார் பெண் இயக்குனர் ஒருவர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என திறமையான நடிகர்கள் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
ஆனால் என்ன தான் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இவர்கள் பெரும்பாலும் பெண் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.
சூர்யா மட்டும் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து தற்போது வல்லமை தாராயோ என்ற படத்தின் இயக்குனரான மதுமிதா பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சூர்யா தான் பெஸ்ட்.. ஆண் இயக்குனர்கள் மட்டும் இல்லாமல் பெண்கள் இயக்கத்திலும் நடிக்கிறார், ஆனால் அஜித், விஐய் போன்றவர்கள் அதற்கு இடம் கொடுப்பதில்லை.
அவர்களிடம் கதை சொல்ல வேண்டும் என சென்றால் கூட அவர்களின் மேனேஜர்களே பெண்கள் இயக்கத்தில் எல்லாம் நடிக்க மாட்டாங்க, போயிட்டு வாங்க என அப்படியே அனுப்பி விடுகின்றனர் என கூறியுள்ளார்.
அஜித்தும் விஜயும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது போல பெண்களின் இயக்கத்தில் நடிக்கவும் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.