வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி ரஜினியுடன் அஜித் மீண்டும் மோத போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Valimai Vs Viswasam Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் சில சண்டை காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தினை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடலாம் என ஒட்டுமொத்த இந்த படத்தில் தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. கொரானா வைரஸ் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருவதால் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளது படக்குழு.

2021 தீபாவளிக்கு படத்தின் ரிலீஸை வைத்துக் கொள்ளலாம் என படக்குழு ஆலோசனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வலிமை திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்துடன் மோதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு தான் ரிலீஸ் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அஜித்தின் விசுவாசம் மற்றும் ரஜினியின் பேட்டை திரைப்படம் நேருக்கு நேர் மோதிய நிலையில் விசுவாசம் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறை மோதலில் ஜெயிக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.