Valimai Update From Yuvan

வலிமை படக்குழுவினர் அப்டேட்டை வெளியிடுவோமா என பிடிவாதமாக இருந்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா புகைப்படத்தோடு தரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Valimai Update From Yuvan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வலிமை பட அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் படக்குழுவினர் அப்டேட்டை வெளியிடும் போது வெளியிடுவோம் அதுவரை அமைதியாக இருங்கள் என தெரிவித்து விட்டனர்.

இப்படியான நிலையில் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலிமை படத்திற்காக வேலை செய்துவருவதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் செம ஹாப்பியாகி உள்ளனர். அப்டேட்டை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றிகள் பல தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.