Valimai Song Shooting Photos

வலிமை பட பாடல் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Valimai Song Shooting Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது.

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடம் முடிந்த நிலையில் அப்டேட் எதுவும் வெளியிடவில்லை.

சமீபத்தில் போனி கபூர் முதல் முறையாக பிப்ரவரி 15ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் ஓரிரு காட்சிகள் மட்டும் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தல ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது வலிமை பட பாடல் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது.