Valimai Release Plan
Valimai Release Plan

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் பேசியுள்ளார்.

Valimai Release Plan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்து வருகிறார். ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நின்று உள்ளன. மேலும் தற்போது தியேட்டர்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

மாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா? – வெளியான ஷாக்கிங் தகவல்

மேலும் நிலைமை சீரான பிறகும் தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் பல படங்கள் OTT வழியாக ரிலீசாக உள்ளன.

இந்த நிலையில் போனி கபூர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வலிமை திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா? அல்லது OTT வழியாக ரிலீஸாக வாய்ப்பு உள்ளதா? என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு தயாரிப்பாளர் போனி கபூரை படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் வலிமை திரைப்படம் OTT வழியாக வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.