Valimai Release in OTT

வலிமை திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் பெயரில் வெளியான பதிவு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

Valimai Release in OTT : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் அப்டேட் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது போனி கபூர் பெயரில் டுவிட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் நன்றி அஜித் சார், நன்றி யுவன் சங்கர் ராஜா மற்றும் நன்றி அமேசான் பிரைம் வீடியோ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவு இணையத்தில் தீயாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது உண்மையில் போனிகபூர் பதிவிட்ட பதிவு அல்ல. போலியாக உருவாக்கப்பட்ட பதிவு என்பதுதான் ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.