Valimai Release in OTT

வலிமை திரைப்படத்தை OTT வழியாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Valimai Release in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிவடைந்து விட்டன. இன்னும் ஒரு வார சூட்டிங் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் படப்பிடிப்புகளை நடத்த முடியாத சூழல் இருந்து வருகிறது.

மேலும் படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடலாம் என்ற முடிவில் இருந்த படக்குழு தற்போது தீபாவளியை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க பல இணையதள நிறுவனங்கள் வலிமை திரைப்படத்தை நேரடியாக OTT-ல் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. மிகப் பெரிய தொகை கொடுத்து இந்த படத்தை வாங்க தயாராக இருப்பதாக கூறி வருகின்றன.

ஆனால் தல அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் வலிமை திரைப்படத்தை திரையரங்குகளில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அஜித் ரசிகர்களும் திரையரங்குகளில் தல தரிசனத்தை காணவே காத்திருப்பதாக கூறி வருகின்றனர்.