Valimai Release in Amazon prime

மாஸ்டரை தொடர்ந்து அமேசான் பிரைம் நிறுவனம் வலிமை படத்தை கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Release in Amazon prime: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பிலும் உருவாகி உள்ள இந்த படத்திற்காக உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் படக்குழு இதுவரை எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. அவ்வபோது சில தகவல்கள் மட்டும் படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வந்து கொண்டிருக்கிறது.

வெகு விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தை கைப்பற்ற அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை நேரடியாக OTT-யில் வெளியிட முயற்சி செய்த அமேசான் நிறுவனம் வலிமை படத்தை டார்கெட் செய்ய தொடங்கியுள்ளது.

ஆனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது OTT-யில் வெளியாகுமா?? படக்குழு என்ன முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.