Valimai Update

வலிமை சூட்டிங் நடத்த டெல்லியில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போய் உள்ளது.

Valimai Race Scene Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமையும் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில் கொரானா வைரஸ் பரவலால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

படத்தில் இடம்பெற உள்ள ரேஸ் காட்சி ஒன்றை டெல்லியில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான போனி கபூர் ஈடுபட்டு வந்த நிலையில் டெல்லி அரசு ஷூட்டிங் நடத்த அனுமதி மறுத்துள்ளது.

இதனால் படக்குழு வேறொரு இடத்தை தேர்வு செய்ய உள்ளது. இந்த ரேஸிங் காட்சி ரசிகர்களுக்கு செம மாஸ் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.