YouTube video

Valimai Movie Update : தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு தோல்விகளையும் தடைகளையும் தாண்டி இன்று உச்ச நடிகராக இடம் பெற்றிருந்தவர் அஜித்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர்ச்சியாக 4 படங்களில் நடித்ததை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்தார்.

இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இவர் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் எடையை குறைத்து ஒல்லியான ஷெரின் – வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்!

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே மீண்டும் தயாரிக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அது நடக்காமல் போய் விட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நின்று உள்ளன.

இந்த நிலையில் தற்போது வினோத் தரப்பில் இருந்து சில அப்டேட்கள் கிடைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

அதாவது இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் 45 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஊரடங்கு முடிந்ததும் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் படமாக்கப்படும்.

அதன் பின்னர் இந்தப் படத்தை டிசம்பரில் முடித்து விட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழு திட்டம் தீட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்தே திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு படங்கள் மோதிக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் அஜித்தும் ரஜினியும் மோதிக் கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.