Valimai Movie Update

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த மாஸான தகவல் வெளியாகி உள்ளது.

Valimai Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்னும் திரைப்படம் வெளியாக உள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் சில காட்சிகள் மட்டும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் வலிமை படத்தை படக்குழு அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் எனவும் கூறப்படுகிறது.

இவற்றில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.