இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்ட விலைக்கு வலிமை திரைப்பட உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Valimai Movie Rights Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கி விட்டது. வெளிநாட்டில் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் கொரானா தொற்று காரணமாக அது தள்ளி போய் வருகிறது. இதற்கிடையில் தல அஜித் இந்த படத்திற்கான டப்பிங்கை முடித்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் உரிமையை பிரபல நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் மிகப் பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் வலிமை திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.