Valimai Movie Photo

வலிமை படத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Valimai Movie Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் இருந்து டைட்டில் வெளியானதை தவிர வேறு எந்த தகவலையும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை.

இப்படியான நிலையில் வலிமை படத்தில் இருந்து குரூப் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் உரையாடிய சாம் சி எஸ் விரைவில் தல அஜித்துடன் இணைந்து பணியாற்றுவேன் எனவும் தன்னுடைய ஃபேவரைட் நடிகர் அஜித் எனவும் தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/AjithFCMadurai/status/1344487724800045056?s=19