Valimai Movie Overseas Rights Details

ஷூட்டிங் முடிவதற்கு முன்பாகவே வலிமை படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Valimai Movie Overseas Rights Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, சதுரங்கவேட்டை போன்ற திரைப்படங்களை இயக்கிய எச் வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

போனி கபூர் இப்படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மாஸ்டர், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களை கைப்பற்றிய United Indian Exports நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இது பற்றியும் படக்குழு இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடாமல் வழக்கம்போல் மௌனம் காத்து வருகிறது.