Valimai Movie Latest Update

வலிமை படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Movie Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். நாயகியாக பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த ஹூமா குரோஷி நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள சுமித்ரா இந்த படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே அஜித்தின் 1997 ஆம் ஆண்டு வெளியான பகைவன் படத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அஜித் இரண்டு வித்தியாசமான லுக்கில் ஒருவர் அவருக்கு இரண்டு ஷேடோ உள்ளது உள்ளது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.