Valimai Movie Latest Update
Valimai Movie Latest Update

வலிமை திரைப்படம் இந்திய அளவில் பேசக்கூடிய ஒரு விஷயத்தை பற்றி பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Valimai Movie Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்கிறார். நாயகியாக பாலிவுட் சினிமாவில் சேர்ந்த ஹீமா குரோஷி நடித்துள்ளார்.

மறக்க முடியாத தருணம்.. அஜித்துடனான மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட அருண் விஜய்!

வில்லனாக தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற rx100 படத்தின் நாயகனான கார்த்திகேயா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இன்னும் பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போல இதுவும் ஒரு மாஸான போலீஸ் கதையாக உருவாகி வருகிறது. அந்த படத்தில் தவறவிட்ட சில நுணுக்கங்களை வினோத் வலிமை படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

சினிமா துறை இதுவரை பல போலீஸ் கதைகளை பார்த்து பழகி இருந்தாலும் இது முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கும். மேலும் அனைத்து போலீஸ் கதைகளுக்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

ரசிகர்களால் தேசிய அளவில் அசிங்கப்பட்ட அஜித் விஜய் – இந்த கொடுமையை நீங்களே பாருங்க.!

அதேபோல் இப்படத்தின் தயாரிப்பாளர் வலிமை திரைப்படம் இந்திய அளவில் பேசக்கூடிய ஒரு படமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.