Valimai Last Schedule Update

வலிமை படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு எங்கே நடைபெற உள்ளது என்பது குறித்த தகவலை நடிகர் கார்த்திகேயா வெளியிட்டுள்ளார்.

Valimai Last Schedule Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தினை போனி கபூர் தயாரிக்க ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க வில்லனாக RDX100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடித்து வருகிறார். இவர் விரைவில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி மே ஒன்றாம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார் கார்த்திகேயா. அதாவது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற இருப்பதாக நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.