Valimai Movie Intro Song Update

வலிமை படத்தின் ஓப்பனிங் சாங்கை பாடியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி ஆக்கியுள்ளது.

Valimai Intro Song Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இதற்கு திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படம் பற்றி ஒரு சிறு அப்டேட் ஆவது வெளியாகாதா என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு ஒன்றரை வருடமாக எந்த வித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஓப்பனிங் சாங் பாடி இருப்பது யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது வலியை படத்தின் ஓப்பனிங் சாங் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவே பாடியுள்ளாராம்.

இது நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு இந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் அஜித் ரசிகர்கள் இந்த தகவலால் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.