Valimai FL and Teaser Update

வலிமை படக்குழு அடுத்ததாக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

Valimai FL and Teaser Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக இப்படக்குழு வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அங்கு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இன்னும் ஒரு மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விடும் அதன் பிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வலிமை படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அஜித் ரசிகர்களுக்கு இனி தொடர்ந்து வலிமை கொண்டாட்டமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.