Valimai FL and Motion Poster Release

ஒரே நாளில் தல அஜித் டபுள் ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Valimai FL and Motion Poster Release : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை இயக்குனர் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. ஒன்றரை வருடங்களாக படம் பற்றி எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு மே ஒன்றாம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அஜித்தின் பிறந்தநாளான இதே தினத்தில் நன்மை படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாக உள்ளதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் ஒரே நாளில் தல அஜித்திற்கு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருப்பதால் தல அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.