Valimai First Look Announcement

வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் என்பது குறித்த அறிவிப்பை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

Valimai First Look Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தினை பற்றி எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்ஸ் எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் 50-வது பிறந்த நாளான மே 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன்ஸ பணி துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.