வலிமை படத்தின் ஃபேன் மேட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Valimai Fan Made FirstLook Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பரவிவரும் கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.