Valimai Chasing Scene Update

வலிமை படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை தல அஜித் மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Valimai Chasing Scene Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மட்டுமே பிப்ரவரி மாதம் முடிவடைந்து விட்டது. ஒரே ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்க பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதே தினத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இதனால் அஜித் பிறந்தநாளில் தல ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் காத்துக் கொண்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது வலிமை படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது தல அஜித் இந்த படத்திற்காக முதல்முறையாக பஸ்சை ஓட்டும் காட்சியில் நடித்துள்ளார். ஒரு சேசிங் கட்சியில் அவர் பஸ்ஸை ஓட்டுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காட்சி அது அதில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்காக கூட்டியுள்ளது.