Vadivelu, Suriya combo to be back for Suriya 40 after 12 years

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu and Suriya combo to be back for Suriya 40 after 12 years : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரை போற்று என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூர்யா 40. இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். டி.இமான் இசையமைக்க உள்ள இப்படத்தில் சத்யராஜ், தங்கதுரை, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தற்போது காமெடி நடிகர் வடிவேலு இந்த படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகா வில்லை.

சூர்யாவுடன் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இவர்களது கூட்டணி தொடருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்