Vadivasal Movie Update

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள வாடி வாசல் திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Vadivasal Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன.

தற்போது இது குறித்து கலைப்புலி எஸ் தாணு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் (@VetriMaaran) இயக்கத்தில்
சூர்யா (@Suriya_offl) நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்🙏🏽 #Vaadivasal #StopSpreadingFakeNews என கூறியுள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.