Vadivasal Movie Update

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் வாடிவாசல் திரைப்படம் தொடங்காமல் இருப்பதற்கு காரணம் தெரிவித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

Vadivasal Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இதற்கான அறிவிப்பு எதுவும் வராத நிலையில் வெற்றிமாறன் ஒரு பேட்டி ஒன்றில் காரணத்தை கூறியுள்ளார்.

அவர் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டதாகவும், மேலும் வாடிவாசல் படத்திற்கு 500 முதல் 2 ஆயிரம் ஆட்கள் தேவைப்படுவதாகவும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் வேண்டும் என்ற காரணத்திற்காகவும் படம் தற்செயலாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.