Vadachennai Movie Secrets
Vadachennai Movie Secrets

வெற்றிமாறனை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி பட வாய்ப்பை வாங்கியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Vadachennai Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றி மாறன். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை.

மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

விஜய் செடி நட்டது இருக்கட்டும்.. அந்த போட்டோவில் இத கவனிச்சீங்களா?? – அம்பலமாகும் உண்மைகள்

வட சென்னையைச் சார்ந்த படம் என்பதால் படத்தின் கெட்ட வார்த்தைகளுக்கு பஞ்சமே இருக்காது. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் என அனைவரும் சகஜமாக கெட்ட வார்த்தைகளைப் பேசி இருப்பார்கள்.

இது குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தான் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று போது வெற்றிமாறன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் தன்னை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவது கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தான் எதிர்பார்த்தது போலவே கெட்ட கெட்ட வார்த்தையில் சரளமாக திட்டியதை பார்த்த வெற்றிமாறன் உடனே அவருக்கு இதுதான் இந்த படத்தோட ஹீரோயின் என வாய்ப்பை தூக்கி கொடுத்துள்ளார்.