Vaathi Coming Hits 50M Views

50 மில்லியன் பார்வையாளர்களை வெற்றிகரமாக கடந்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் சாங்.

Vaathi Coming Hits 50M Views : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா சாந்தனு அர்ஜுன் தாஸ் போன்ற திரை உலக பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் வசூலில் சாதனையும் அடைந்துள்ளது.

இந்த படத்தில் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாட்டுக்கு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்,. அது குறித்து வீடியோக்களும் அவ்வப்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் “வாத்தி கம்மிங் சாங்” 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.