அஜித் நடிப்பில் வெளியான வாலு படத்தில் ஒரே ஒரு நாள் அவருக்கு ஜோடியாக வேறு ஒரு நடிகை நடித்துள்ளார்.
Vaali Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வாலி.
அஜித் ஹீரோ வில்லன் என டபுள் ஆக்ஷனில் மிரட்டி இருந்த இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் நாயகியாக சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆனால் சிம்ரனுக்கு பதில் அதற்கு முன்னதாக வேறு ஒரு நடிகையைத்தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் பெயர் கீர்த்தி ரெட்டி. தமிழில் தேவதை, நந்தினி, நினைவிருக்கும் வரை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகரான சுமந் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வாலி படத்தின் படப்பிடிப்புகள் மெரினா பீச்சில் தான் தொடங்கியுள்ளன. ஒரே நாள் அஜித்துக்கு ஜோடியாக கீர்த்தி ரெட்டி நடித்துள்ளார். ஆனால் அவருடைய நடிப்பு ரசிக்கும்படியாக இல்லை.
இதனால் எஸ் ஜே சூர்யா கீர்த்தி ரெட்டி நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளார். கீர்த்தி ரெட்டியால் தான் சிம்ரனுக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.