Ussain Manimegalai in Velavan Stores

சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸில் கலகலப்பாக ஷாப்பிங்கை தொடங்கி கலாட்டாவில் முடித்துள்ளனர் உசைன், மணிமேகலை.

Ussain Manimegalai in Velavan Stores : தூத்துக்குடியில் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் கடை தான் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். இந்த கடையில் ஆடைகள் முதல் ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தூத்துக்குடியில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சென்னை தி நகரில் ஏழு அடுக்கு மாடி தளத்துடன் இந்த கடையின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

வேலவன் ஸ்டோர்ஸிலும் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக மிக குறைந்த விலையில் நல்ல ஒரு தரத்தில் கிடைக்கிறது.

பொங்கல், தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற திருவிழா நாட்களில் எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன.

இதனால் திரையுலக பிரபலங்கள் கூட வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகை தந்து ஷாப்பிங் செய்து மகிழ்ந்தனர். விஜய் டிவியை சேர்ந்த வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், குக் வித் கோமாளி புகழ், பாலா, சிவாங்கி, KPY வினோத், விஜே ஜாக்குலின் ஆகியோரின் ஷாப்பிங் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி மணிமேகலை தன்னுடைய கணவர் உசைன்னுடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார்.

தன்னுடைய கணவர் உசைன் வேலவன் ஸ்டோர்ஸில் பணிபரியும் பெண்களுடன் கலாட்டா செய்து மணிமேகலையிடம் அடி உதை வாங்கியுள்ளார்.

இது குறித்த வீடியோ செம வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

YouTube video