Uses of Mobile Ration Shop in Tamilnadu
Uses of Mobile Ration Shop in Tamilnadu

Uses of Mobile Ration Shop in Tamilnadu : இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் ரேஷன் கடைகளை திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

3,501 நடமாடும் ரேஷன் கடைகளின் செயல்பாட்டைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக அமைவதாலும், வீட்டு வாசலிலேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதால், குறிப்பாக கொரோனா போன்ற பேரிடர்களைச் சமாளிக்க இத்திட்டம் ஏதுவாக அமையும்.

மக்களின் அலைச்சலையும், நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டிலும், தெருக்களிலும் மக்கள் ஒன்றிணையக்கூடிய பொதுவான இடங்களில் இந்த ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு அருகிலேயே சென்று விநியோகிக்கப்பட உள்ளது.

அனைத்து நடமாடும் ரேஷன் கடைகளும் செயல்படும் நாள், எந்த இடத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியரிடமிருந்து அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும்.

கல்வியில் புதிய புரட்சி.. 2035-ம் வருட இலக்கை 2020-லேயே நிறைவு செய்த தமிழகம்!

விநியோகத்திற்காக இடமாக, அரசாங்க கட்டிடம், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடங்கள் அல்லது பொதுமக்கள் கூடிவருவதற்கான பொது இடமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 400 கடைகள் திறக்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகம் முழுவதும் 5,36,437 ரேஷன் அட்டைதாரர்கள், இத்திட்டத்தால் பயன் அடைவர்.

முதலில் திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 43 மொபைல் ரேஷன் கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. தற்போது இத்திட்டம், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 2020இல், மாநிலச் சட்டசபையில் நடமாடும் ரேஷன் கடை திட்டம் தொடங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, இத்திட்டத்திற்காக ரூ .9.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் நெரிசலில் அவதிப்படுவது தவிர்க்கப்படும். மேலும் மலைக்கிராமங்களிலும், தொலைதூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் முறை குறைந்து, மக்களுக்கு எளிதான சேவை கிடைக்கும்.

இதனால் இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

3,501 நடமாடும் ரேஷன் கடைகளின் செயல்பாட்டைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக அமைவதாலும், வீட்டு வாசலிலேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதால், குறிப்பாக கொரோனா போன்ற பேரிடர்களைச் சமாளிக்க இத்திட்டம் ஏதுவாக அமையும்.

மக்களின் அலைச்சலையும், நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழகம், இனி ரேஷன் கடைகளில் இதுவும் ஃப்ரீ – தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு(Opens in a new browser tab)