December 2019 release List
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீஸாவது வழக்கம், ஒரு மாதத்திற்கு குறைந்தது 10 படங்களாவது ரிலீசாகி விடும்.

வரும் டிசம்பரிலும் கிட்டத்தட்ட 10-க்கும் அதிகமான படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளன. அவைகளில் டிசம்பர் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ள சில படங்களின் மட்டும் இதோ உங்களுக்காக

தம்பி :

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

 

ஹீரோ :

பி.ஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன். கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர்.

சைக்கோ :

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 27-ம் தேதி ரிலீசாக உள்ளது.

இருட்டு :

VZ துரை இயக்கியுள்ள இந்த இருட்டு திரைப்படத்தில் சுந்தர் சி நடித்துள்ளார். பேய் இல்லாத பேய் படமாக உருவாகியுள்ள இப்படமும் டிசம்பர் ரிலீஸ் தான்.

பச்சை விளக்கு :

டாக்டர் மாறன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பச்சை விளக்கு சாலை விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் இந்த படத்தை உருவாகியுள்ளார். இப்படம் டிசம்பர் 13-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காளிதாஸ் :

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், ஆதவ் கண்ணதாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள டிசம்பர் 13-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரத் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

கேப்மாரி :

விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய 70-வது படமாக கேப்மாரி படத்தை இயக்கியுள்ளார். ஜெய், அதுல்யா, வைபவி சாண்டிலா ஆகியோர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 6-ல் ரிலீஸ்.

ஜடா :

கதிர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் குமரன் இயக்கியுள்ள இப்படமும் டிசம்பர் ரிலீஸுக்கு தான் தயாராகி வருகிறது.

குண்டு :

அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடிக்க பா .ரஞ்சித் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 6-ல் ரிலீசாக உள்ளது.

தனுசு ராசி நேயர்களே :

சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இப்படமும் டிசம்பர் ரிலீஸ் தான். இப்படத்தின் டீசரை பார்த்து ரஜினிகாந்த் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் :

சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 13-ல் ரிலீஸ் என கூறப்படுகிறது.

தேடு :

சுசி இயக்கத்தில் சஞ்சய், மேக்னா, சிவகாசி முருகேஷன் என பலர் நடித்துள்ள இப்படமும் டிசம்பர் 13- ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.