மீண்டும் பல தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக OTT வழியாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Upcoming Movies in OTT Release : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் என எதுவாக இருந்தாலும் தமிழ் திரையுலகை பொருத்தவரை அதனை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் கடந்த வருடம் ஊரடங்கு உத்தரவு, திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட காரணங்களால் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பெரும்பாலான திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்கள் வழியாக வெளியானது. அதன் பின்னர் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் திரையரங்குகளில் வெளியாக தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மீண்டும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக வீட்டு பல பெரிய பட்ஜெட் படங்கள் OTT வழியில் படங்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நேரடியாக OTT வழியாக வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் மீண்டும் திரையரங்குகளை இழுத்து மூடும் நிலை உருவாகலாம் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.